கேரளா மாநிலத்தில் 2 வயது குழந்தை வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் நிகழ்ந்த தேர்தல் வாக்குப்பதிவு மையத்தில் இரண்டு வயது குழந்தை அவரது தாயுடன் வாக்குசாவடி மையத்திற்கு வந்துள்ளது. தனது தாய் வாக்கு செலுத்த மை வைத்ததைக் கண்டு தனக்கும் மை வைக்க வேண்டும் என்று குழந்தை அடம்பிடித்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த அலுவலர்கள் குழந்தைக்கும் விரலில் மை வைத்து விட்டனர். இந்நிலையில் வாக்கு செலுத்தியதுபோல் மை வைத்த விரல்களைக் காண்பித்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த குழந்தையின் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்ததளத்தில் வைரலாகி வருகிறது.