கோவையில் உள்ள ஆர்எஸ் புரம் பகுதியில் நித்தியானந்தம்- நந்தினி தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு 2மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே பிரச்சினைகள் ஏற்பட்டதால் நந்தினி தன்னுடைய இரண்டாவது மகன் துர்ககேஷை தூக்கிக்கொண்டு அவருடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் நந்தினி அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அதனால் அவர் தினமும் காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை வேலை பார்த்துவிட்டு வீட்டிற்கு வருவார்.
இதனால் குழந்தையை நந்தினியின் தாயார் நாகலட்சுமி பார்த்து வந்தார். இதனைத்தொடர்ந்து நேற்று எப்பொழுதும்போல் நந்தினி வேலைக்கு சென்றுவிட்டார். இரவு வந்து பார்க்கும் பொழுது துர்கேஷ் மயங்கிய நிலையில் தொட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். அதனைப்பார்த்த நந்தினி அதிர்ச்சி அடைந்தார். உடனே குழந்தையை அங்கு உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் அதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனையில் குழந்தையின் வாயில் பிஸ்கட் பேப்பர் துண்டுகள் இருந்துள்ளது. மேலும் குழந்தையின் உடம்பில் சிறு காயங்களும் இருந்தது. இந்த காரணத்தால் காவல்துறையினர் குழந்தையின் தாய் மற்றும் பாட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது நாகலட்சுமி தான், குழந்தையை அடித்ததால் குழந்தை கத்தியது. எனவே வாயில் பிஸ்கெட் கவரை திணித்து தொட்டிலில் படுக்க வைத்தேன் என்று கூறியுள்ளார்.
துர்கேஷ் எப்பொழுதும் வீட்டில் உள்ள சிறிய பொருட்களை வாயில் எடுத்து போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதனால் நேற்று இதேபோல் செய்ததால் கோபத்தில் பாட்டி வீட்டில் இருந்த பிஸ்கட் கவரை எடுத்து குழந்தையின் வாயில் திணித்து தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு அவருடைய வேலையை பார்க்க சென்று விட்டார். குழந்தை சிறிது நேரத்தில் மூச்சு திணறி இறந்துவிட்டது. இவை காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாகலட்சுமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறா.ர் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன.