டெல்லி ரோஹினி நீதிமன்றத்தில் ரவுடிகள் துப்பாக்கி சண்டையில் 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று டெல்லியில் இருக்கக்கூடிய ரோகினி கீழமை நீதிமன்றத்தில் நீதிபதி அறை 217ல் நீதிபதி ககன்தீப்சிங் முன் இருதரப்பு ரவுடிகள் துப்பாக்கியால் மாறி மாறி சுட்டுக்கொண்டனர். நாட்டு துப்பாக்கிகளை கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் உ.பி, ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பிரபலமானவனாக அறியப்பட்ட ரவுடி ஜிதேந்தர் கோகி, வழக்கறிஞர் உடையில் வந்த 2 ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும் ரவுடிகள் இடையே இருந்த முன்பகை காரணமாக நடந்த துப்பாக்கி சூட்டில் சுமார் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.. தலைநகர் டெல்லியில் அதுவும் நீதிபதி முன்னதாகவே இத்தகைய துப்பாக்கிச்சூடு நடந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இது முதல் முறை அல்ல.. ஏற்கனவே பலமுறை இது மாதிரியான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறும், காயங்கள் ஏற்படும்.. ஆனால் தற்போது 4 பேர் உயிரிழந்திருக்கின்றனர்..
சமீபகாலமாக தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வரும் நிலையில், வெளிப்படையாக டெல்லியில் இருக்கக்கூடிய ஒரு நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு என்பது நடந்திருக்கிறது.. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..
https://twitter.com/SpeaksKshatriya/status/1441322202427641864