Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இடமாற்றம்…. தமிழக அரசு அதிரடி…!!!!

பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை தொடர்ந்து 8 இயக்குனர்கள் 18 இணை இயக்குனர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் பள்ளிக்கல்வித்துறையில் அதிரடியாக பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி ரத்து செய்யப்பட்டு ஆணையருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. இதன்பின் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறையில் பல்வேறு பிரிவுகளின் இயக்குனர், இணை இயக்குனர், பதவிகளில் உள்ள நான்கு பேரை தவிர மொத்தம் 26 அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி தொடக்க கல்வி இயக்குனராக க. அறிவொளியும் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளராக மூ. பழனிசாமியும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அரசு தேர்வுகள் இயக்கத்தின் இயக்குனராக எஸ். சேதுராம வர்மாவும், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக உஷாராணியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் பொறுப்பில் பே.குப்புசாமியும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கூடுதல் திட்ட இயக்குனர் ஒன்றின் பதவியில் வி.சி ராமேஸ்வர முருகனும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளராக ச.கண்ணப்பனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |