Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆதரவாக….. ஐநாவில் வாலாட்டிய துருக்கி …. இந்தியா மறைமுக எச்சரிக்கை …!!

நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் குறித்து துருக்கி அதிபர் எர்டோகான் பேசியது பலத்த சர்ச்சையை கிளப்பிய நிலையில் இந்தியா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

துருக்கி அதிபர் எர்டோகான் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு நிலைபாட்டோடு காஷ்மீர் குறித்து பேசியுள்ளார். அதாவது 74 வருடங்களாக தொடர்ந்து நீடிக்கும் காஷ்மீர் பிரச்சினையில் காஷ்மீருக்கு ஆதரவளிக்கிறோம் என பேசியுள்ளார். இதற்கு இந்தியா துருக்கி அடுத்த நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது பற்றி கற்றுக்கொள்ள வேண்டும் என கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் சைபர்ஸ் வெளியுறவு அமைச்சரான நிகோஸ் கிறிஸ டோடூலிடெஸை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசியுள்ளார். கடந்த காலத்திலும் துருக்கி இது போன்ற செயல்களில் ஈடுபட்ட போது இந்தியா அர்மீனியா மற்றும் க்ரீஸ் ஆகிய நாடுகளுடன் நெருக்கம் காட்டி உள்ளது.

மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகளுமே துருக்கியுடன் மோசமான உறவுகளை கொண்டுள்ள நாடுகளாகும் நாடுகளிடம் வம்பிழுப்பது துருக்கிக்கு வாடிக்கையான செயலாகும். துருக்கி எப்படி பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்கிறதோ அப்படி இந்தியாவும் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள துருக்கி எதிர்ப்பு நாடுகளிடம் பன்மடங்கு தனது ஆதரவை அதிகரிக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என கருதி இந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |