Categories
மதுரை மாவட்ட செய்திகள்

1 கிலோ நகைக்கு ஆசைப்பட்டு…. அண்ணியை மணந்த கொழுந்தன்…. கடைசியில் நேர்ந்த சோகம்…!!!

தன்னுடைய சுயநலத்திற்காக அண்ணியை திருமணம் செய்து அவருடைய வாழ்க்கையை சீரழித்த கொழுந்தனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மதுரை மாவட்டம் கே.பாறைப்பட்டி தொகுதியில் தலையாரி பாண்டி வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு மூத்த மகன் பிரபாகரனுக்கும் காளவாசல் சேர்ந்த மாளவிகா என்ற பெண்ணிற்கும் திருமணம் பெரியோர்கள் சம்மதத்துடன் நடத்தி வைக்கப்பட்டது.

திருமணத்தின் போது வரதட்சணையாக பெண் வீட்டார் மணமகனுக்கு 1 கிலோ நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கமும், கொடுத்துள்ளார்கள். திருமணமாகி 10 மாதங்கள் கழித்து பிரபாகரனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு மஞ்சள் காமாலை இருப்பது தெரிந்துள்ளது. அதனால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பிரபாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து திருமணமாகி 10 மாதங்களில் கணவனை இழந்த மாளவிகா அவருடைய வீட்டிற்கு சென்று விட்டார். அதனால் திருமணத்தின் போது கொடுத்த 1 கிலோ நகை மற்றும் ரொக்கத்தையும் பெண்வீட்டார் வாங்கிக் கொண்டனர். சில நாட்கள் கழித்த பின், மாளவிகா அந்தப் பகுதியில் உள்ள டைப்பிங் சென்டருக்கு சென்று வந்துள்ளார். அப்பொழுது பிரபாகரனின் தம்பி பிரகாஷ் அண்ணி மாளவிகாவை சந்தித்து காதல் தொல்லை கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து நான் உங்களை நன்றாக பார்த்துக் கொள்வேன் என்றும், இருவரும் சேர்ந்து வாழலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதனால் மாளவிகா கொழுந்தனை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனால் இந்த முடிவிற்கு மாளவிகாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் சில மாதங்களுக்கு முன்பு மாளவிகா வீட்டை விட்டு சென்று கொழுந்தனை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில் மாளவிகா வீட்டில் வரதட்சணை கேட்டுள்ளார்கள் பிரகாஷின் குடும்பம் மகளை தொந்தரவு செய்வார்கள் என்ற பயத்துடன் 80 சவரன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் கொடுத்திருக்கிறார்.

ஆனால் இதற்கு முன் கொடுத்தவாறே கொடுங்கள் என்று கூறியிருக்கிறார்கள். அவர் கொடுக்காததால் மாளவிகாவை தினமும் வரதட்சணை கேட்டு பிரகாஷ் குடும்பத்தினர் கொடுமை படுத்தியுள்ளனர். அதனால் மாளவிகா தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாளவிகாவின் வீட்டார் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளனர்.  இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ் மற்றும் அவருடைய   தந்தை தலையாரி பாண்டி இருவரையும் கைது செய்தனர் மேலும் தலைமறைவாக உள்ள மாமியாரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |