Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற பெண்…. சிறுவர்கள் செய்த செயல்… மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

பெண்ணிடம் செல்போன் பறித்த  குற்றத்திற்காக சிறுவனை காவல்துறையினர் கைது செய்துஉள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கதிர்வேல் நகரில் டெயிலரான கலா என்பவர் வசித்து வருகிறார்.   இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் பள்ளிக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார் .  அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சிறுவர்கள் கலாவின் கைகளில் இருந்த செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயற்சி செய்துள்ளனர்.

இதனை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் ஒரு சிறுவனை மட்டும் மடக்கி பிடித்து விட்டனர்.  அதன் பிறகு பொதுமக்கள் அந்த சிறுவனை காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்து,  தப்பி ஓடிய மற்றொரு சிறுவனை தீவிரமாக தேடி வருகிறனர்.

 

Categories

Tech |