Categories
கிரிக்கெட் விளையாட்டு

மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டாரா பஞ்சாப் வீரர் ….? பிசிசிஐ அதிரடி நடவடிக்கை ….!!!

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் வீரர் தீபக் ஹூடா இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படம்  பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

14 வது சீசன் ஐபிஎல் தொடரின் நேற்று முன்தினம் நடந்த 32-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய ராஜஸ்தானில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. இதன்பிறகு களமிறங்கிய பஞ்சாப் அணி 183 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்து .இதனால் 2 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வி அடைந்ததால் பெரிதளவு விமர்சனத்துக்கு உள்ளாகியது.இப்போட்டியின் போது பஞ்சாப் அணியின் முன்னணி  வீரரான தீபக் ஹூடா போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக தான் ஹெல்மெட்டுடன் இருக்கும் புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார்.

தற்போது இது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது .அவருடைய இந்த செயல் பிசிசிஐ ஊழல் தடுப்பு விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது .குறிப்பாக போட்டியில் விளையாடும் வீரர்கள்  பிளேயிங் லெவலில் விளையாடுவதை உறுதி செய்யும் விதமாக எந்த ஒரு செயலிலும் ஈடுபட கூடாது . ஆனால் போட்டிக்கு முன்பாக இவர் தனது புகைப்படத்தை  பதிவிட்டது பிசிசிஐ விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்த பிசிசிஐ தடுப்பு குழு நிர்வாகிகளை நியமிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .இந்நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தீபக் ஹூடா  டக் அவுட் ஆகி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |