வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வாலிபர் ஒருவரிடம் மற்றொரு நபர் தகராறு செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அவர்களை பிடித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இருவரும் அதே பகுதியில் வசிக்கும் சூர்யா மற்றும் சாந்தகுமார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் சூர்யா சாந்தகுமாரை வழிமறித்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாரதிநகர் பகுதியில் வசிக்கும் செழியன் என்ற சிறுவனிடமிருந்து சூர்யா கைபேசியை பறித்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சூர்யாவிடமிருந்த கைபேசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சூர்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.