ஆற்றில் குதித்து மூதாட்டி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அய்யப்ப சேவா காவிரி ஆற்று படித்துறை அருகில் மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மூதாட்டி ஆற்றில் குதித்து தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதன்பின் மேல்சிகிச்சைக்காக மூதாட்டி ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி யார்..? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.