கேட்பாரற்று கிடக்கும் 22 இருசக்கர வாகனங்கள் குறித்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையம் அருகாமையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைந்திருக்கிறது. இதை ரமேஷ் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் இம்மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இருசக்கர வாகனங்களில் பேருந்து நிலையத்திற்கு வந்து அதனை வாகனம் நிறுத்தும் இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து விட்டு பேருந்துகளில் வெளியூர் சென்று வருவதை பொதுமக்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதற்காக ரமேஷ் வாகன உரிமையாளரிடம் குறிப்பிட்ட தொகையை வசூலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் 22 வாகனங்களை நிறுத்தி விட்டு சென்ற நபர்கள் அதை திரும்ப எடுத்து செல்லாததால் ஒரு வருடத்திற்கும் மேலாக அங்கேயே கிடந்துள்ளது. இது தொடர்பாக ரமேஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் ஒரு வருடமாக கிடக்கும் 22 இருசக்கர வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 22 இருசக்கர வாகனங்களின் என்னையும் சேகரித்து வாகன உரிமையாளர்கள் யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.