Categories
மாநில செய்திகள்

குழந்தையை அறுவைசிகிச்சை செய்து…. முன் கூட்டியே எடுக்கக்கூடாது…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் உள்ளிட்ட சீர்வரிசைகளை வழங்கினர். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், குழந்தை சுகப்பிரசவமாக பிறக்கும் வகையில் தாய்மார்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

மேலும் மகப்பேறு காலத்தில் தாய்மார்கள் தாங்கள் விரும்பிய நாளில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை முன்கூட்டியே எடுக்கக்கூடாது என்றும் உருக்கமாகக் கேட்டுக் கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இருந்தாலும் உணவு, கல்வியில் பாரபட்சம் காட்டக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |