Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானில் கோர விபத்து!”.. பயிற்சி விமானம் எரிந்து சாம்பலானது!..!!

பாகிஸ்தான் நாட்டின் விமானப்படைக்குரிய பயிற்சி விமானம் திடீரென்று விபத்துக்குள்ளாகி தீயில் கருகி சாம்பலாகியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள Khyber Pakhtunkhwa என்ற மாகாணத்தில் இருக்கும் Mardan என்னும் நகரில் வழக்கமாக நடைபெறும் பயிற்சி நடந்து கொண்டிருந்துள்ளது. அப்போது, விமானப்படைக்குரிய பயிற்சி விமானமானது, எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி தீ பற்றி எரிந்துள்ளது. இது தொடர்பில் பாகிஸ்தானின் விமானப்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், விபத்து நேர என்ன காரணம்? என்பது தொடர்பில் விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணை குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விமானத்தில் இருந்த விமானியின் நிலை தொடர்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

Categories

Tech |