ஊரடங்கு கட்டுபாடுகளை தளர்த்த போவதாக பெங்களூர் மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டியளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தற்போது கொரோனா பரவல் குறைந்து கொண்டு வருவதால் ஊரடங்கில் சில தளங்களை கொண்டு வருவதற்கு பெங்களூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது பெங்களூரு தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளதாவது: பெங்களூருவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகின்றது.
அங்கு தினசரி பாதிப்பு 300க்கும் கீழ் சென்றதால் பொது ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்படவுள்ளது. மேலும் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளிக்கப்படும். நிகழ்ச்சி, திருவிழா மற்றும் பூஜைகளுக்கு விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்படும், திரையரங்குகளிலும் 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என கூறியுள்ளார்.