பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இளைஞனை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள அழகர்சாமிபுரத்தில் புவனேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் மதுராபுரியில் செயல்பட்டு வரும் மதுபான கடையின் பூட்டை உடைத்து மதுபானங்களை திருடிய குற்றத்திற்காக அல்லிநகரம் காவல்துறையினர் புவனேஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இதனையடுத்து புவனேஸ்வரன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே மாவட்ட ஆட்சியர் முரளிதரனுக்கு பரிந்துரை சென்றுள்ளார். அதனை பரிசீலனை செய்து புவனேஸ்வரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்படி புவனேஸ்வரனை குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து மதுரை மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.