Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BREAKING : ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா… போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்… ஐபிஎல் நிர்வாகம்!!

 ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் டெல்லி – ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.. புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் இரண்டாவது பட்டியலில் உள்ள டெல்லி அணியும், 2 புள்ளிகளில் கடைசி இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் அணி யும் மோத இருக்கின்றன.. இந்த நிலையில் ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் விளையாடும் ஹைதராபாத் அணி வீரர் ஒருவருக்கு உறுதியாகியுள்ளதால், நடராஜன் உடன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர் அணி நிர்வாகத்தினர் உட்பட 6 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். டெல்லி உடன் இன்று விளையாட இருந்த நிலையில் வீரர் ஒருவருக்கு  தொற்று ஏற்பட்டதால் போட்டி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டது.

இந்தநிலையில், மற்ற வீரர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. எனவே நடராஜனுக்கு தொற்று ஏற்பட்டாலும் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |