உயர்கல்வி பயில விரும்பும் மாணவ மாணவிகள் கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்ற சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் விருப்பமுள்ள மாணவர்கள் https.www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கல்விக் கடன் பெறலாம். வங்கி சேமிப்பு கணக்கு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பான் கார்டு, ஆதார் அட்டை, வருமானச் சான்று, மதிப்பெண் சான்று, கல்லூரிகளில் சேர்க்கைக்கான கணக்கீட்டு கடிதம், கல்வி கட்டணம் விவரம் ஆகியவற்றை கல்விக்கடன் பெற தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
Categories
மாணவர்களே… உயர்கல்வி பயில கல்விக்கடன்…. அதிரடி அறிவிப்பு….!!!!
