குஜராத் மாநிலத்தின் மெஹ்சானாவில் உள்ள கிராமத்தை சேர்ந்த 31 வயதான அரவிந்த் சவுத்ரி என்பவர் தனது பகுதியில் நூலகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 15ம் தேதியில் முடி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவரை, கண்காணிப்பிற்காக இரவு 10 மணி வரை அக்கிளிக்கினிலேயே தங்க வைக்கத்துள்ளனர்.இதனை அடுத்து அவருக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாததால் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
பின்னர் வீடு சென்று உணவருந்தி உறங்கியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 17ஆம் தேதி அன்று திடீரென்று உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவர் அறுவை சிகிச்சை செய்த கிளினிக்கிற்கே சென்றிருக்கிறார். அவரை பரிசோதித்த போது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டிருக்கிறார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 18ஆம் தேதி காலையில் மரணமடைந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய குடும்பத்தார் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர், அரவிந்த் சவுத்ரியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளிவந்த பிறகே சிகிச்சை செய்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மருத்துவமனை மருத்துவரிடம் இது குறித்து விசாரணை செய்யப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.