தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து அனைத்து அரசுத் துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அந்தவகையில் குறிப்பாக பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு எல்லா நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்து வருகிறது.
தமிழகத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு என்பதே ஒரே குறிக்கோள். அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக தனியார் பள்ளி மாணவர்களுக்கு சமமாக அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் பேச முடியும். பள்ளி மாணவர்களை நலனுக்காகவே இந்த அரசு எப்போதும் செயல்படும் என்று கூறியுள்ளார்.