Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காற்றுடன் பெய்த மழை…. அடியோடு சரிந்த வாழை மரங்கள்…. கவலையில் விவசாயிகள்….!!

காற்றுடன் பெய்த கன மழையால் வாழை மரங்கள் சரிந்து விவசாயிகள் கவலையில் இருக்கின்றர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டிக்கொட்டை தாள பாளையம், கூனாக்க  பாளையம் போன்ற பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பல வகையான வாழைமரங்களை சாகுபடி செய்தனர். இந்நிலையில் இந்தப் பகுதிகளில் காற்றுடன் பெய்த கன மழையினால் 50 ஆயிரம் வாழை மரங்கள் அடியோடு சரிந்து நாசமானது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியபோது 2 மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் கனமழையால் சரிந்து விழுந்தது. இதனால் 2 கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கொரோனா காலகட்டத்தில் விவசாயம் தொடர்ச்சியாக செய்ய முடியாதபோது இதுபோன்ற இழப்புகளை வேளாண்மைத் துறையினர் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |