பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், பாஜக ஆட்சியில் தான் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது என்று ஒருசிலர் கூறுகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. பொருளாதாரம் சரிந்த போதுதான் விலை உயர்ந்தது என்பது உண்மை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும் என்பது தான் மத்திய அரசின் நிலைப்பாடு.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசு பள்ளியில் படித்து பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் கட்டணம் இலவசம் என்பது வரவேற்கத்தக்கது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இடையே எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் முடிவு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.