ஆக்கிரமிப்பு செய்த இடங்களை அதிகாரிகள் அகற்றக்கோரி பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அவல்பூந்துறை அம்பேத்கர் நகரில் வசித்து வரும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அம்பேத்கர் நகர் பகுதியில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் விளையாட்டுத்திடல் ஒன்று இருக்கின்றது.
இதனை சில பெண்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் அதிகாரிகள் அங்கு வந்து பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இந்நிலையில் அங்கு குடிசைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. ஆகவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.