போக்குவரத்து பாதிப்பைத் தடுக்க ரயில்வே மேம்பால பணிகளை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் ரயில்வே நிலையத்தில் காலிபெட்டிகளுடன் கூடிய சரக்கு ரயில் வந்தது. இதனையடுத்து ரயில் தஞ்சாவூர் நோக்கி புறப்பட்டது. அதன்பின் விரைவு ரயில் வந்ததால் ரயில்வே கேட் சுமார் ஒரு மணிநேரம் அடைக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக தஞ்சை-திருவாரூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மாலை வேளையில் எர்ணாகுளம் விரைவு ரயிலுக்காக ரயில்வே கேட் அடைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அரிசி ஏற்றிய சரக்கு ரயில் புறப்படும் பணி நடைபெற்றது. இந்த பணி முடிந்து சுமார் 1 மணிநேரம் பிறகு ரயில்வே கேட் திறக்கப்பட்டதால் மாலை வேளையும் நீடாமங்கலம் நகரில் நெடுஞ்சாலை போக்குவரத்து சுமார் 1 மணிநேரம் பாதித்தது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இதனை தவிர்க்க கிடப்பில் போடப்பட்டுள்ள நீடாமங்கலத்தின் மேம்பாலம் திட்டத்தை தொடங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.