இந்தியா -ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது .
இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் தொடர் 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மெக்காயில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இருந்து டி20 அணியின் கேப்டனும், ஆல்ரவுண்டருமான ஹர்மன்பிரீத் கவுர் கை பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியுள்ளார் .இதையடுத்து அடுத்த போட்டியில் அவர் உடல் தகுதியை பெற்று விடுவார் என அணியின் தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பவார் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .
இப்போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பற்றி கூறும் போது,” அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக சிறந்த அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது .மேலும் இத்தொடர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக சிறப்பான முறையில் தயாராவதற்கு உதவியாக இருக்கும் .அணியின் கலவைக்கு தகுந்தபடி மிடில் ஆர்டரில் எந்த இடத்திலும் என்னால் விளையாட முடியும். எங்களது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்த நாங்கள் முயற்சிப்போம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.