மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள நெல்லை புரத்தில் பேச்சியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்து சென்றுள்ளனர்.
இது தொடர்பாக பேச்சியம்மாள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகை பறித்து சென்ற 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.