Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு செஸ் வரியை கைவிட்டால்…. தமிழகம் இதற்கு சம்மதிக்கும்…. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், தமிழக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்றால் அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலைப்பாடானது தற்போது அவர் முதல்வராக வந்த பிறகு மாறிவிட்டது. அதாவது ஜிஎஸ்டி வரம்பின் கீழ் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வருவதை தமிழக அரசு எதிர்க்கிறது.

இது தேர்தலுக்கு பிந்தைய திமுகவின் நிலைப்பாடு. இதன்மூலம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக இதெல்லாம் திமுகவினர் கூறியுள்ளனர் என்று மக்கள் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே முதல்வர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு பொது மக்களின் சுமையை குறைக்கும் வண்ணம் ஜிஎஸ்டின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மத்திய அரசு செஸ் வரியை கைவிட்டால் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவதற்கு தமிழக அரசு சம்மதம் தெரிவிக்கும். மேலும் மாநிலங்களுக்கு மதுபானம், பெட்ரோல், டீசல் ஆகியவற்றிலிருந்து தான் வரி வருவாய் கிடைக்கிறது. மாநில வரி வருவாயை  மத்திய அரசு எடுத்துக் கொண்டால் மாநிலங்கள் எப்படி நிர்வாகத்தை நடத்த முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |