Categories
உலக செய்திகள்

தலீபான்களால் சிறை வைக்கப்பட்டிருந்த சுவிஸ் தம்பதி.. 8 மாதங்கள் கழித்து தப்பி வந்த சம்பவம்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் மாட்டி சிறைபிடிக்கப்பட்ட சுவிட்சர்லாந்து தம்பதிகள் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் சூரிச் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2011 ஆம் வருடத்தில், Daniela Widmer மற்றும் David Och என்ற தம்பதியரை தலிபான்கள் சிறை வைத்தனர். மேலும் மலைப்பகுதிக்கு இழுத்துச் சென்று ஒவ்வொரு இடமாக 14 நாட்களாக அலைய வைத்திருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் பகல் நேரத்தில் ஆட்டுக்கடையில் தூங்க வைக்கப்பட்டுள்ளனர். இரவு சமயத்தில், சதுப்பு நிலங்களில் அலைய வைத்திருக்கிறார்கள்.

இதனால், கடும் பாதிப்படைந்த Daniela, ஆறு மாதங்களாக வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டிருக்கிறார். மேலும், அவருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டு 22 கிலோ எடை குறைந்து விட்டார். அதன்பின், தலீபான்கள் ஒரு வீட்டின் முற்றத்தில் தங்க வைத்த பின்பு தான் உடல்நிலை சரியானது என்று கூறியிருக்கிறார். மேலும் ஆடைகள் தொடர்பில் தலிபான்கள் அதிக கட்டுப்பாடு விதித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், Daniela, அடிக்கடி அழுதுகொண்டே இருந்திருக்கிறார். எனவே, தலிபான்கள் பெண்கள் அழக்கூடாது, அது பாவம் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும், தலிபான்கள் நினைத்தால், தன்னை பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் அல்லது கொடுமைக் கூட செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் தன்னை தவறாக பார்க்கக்கூட இல்லை. மேலும் தன் அருகில் கூட நெருங்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும், இத்தம்பதியை மீட்க, சுவிஸ் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதில், தலீபான்கள் 50 மில்லியன் கேட்டிருக்கிறார்கள். ஆனால் சுவிஸ் அரசு, 1.2 மில்லியன் தான் தருவதாக தெரிவித்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து மற்றும் தலீபான்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை ஒரு போதும் முடிவுக்கு வராது என்று தீர்மானித்து, அங்கிருந்து தப்பி வந்ததாக தெரிவித்துள்ளார். அதன்பின்பு, சுமார் 259 தினங்களுக்கு பின், கடந்த 2012-ஆம் வருடம் மார்ச் மாதம் 17ம் தேதி அன்று தான் சூரிச் விமான நிலையத்திற்கு வந்தடைந்ததாக கூறியுள்ளார்.

Categories

Tech |