முன்னாள் நிதியமைச்சர் ஓபிஎஸ் திமுகவின் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் விலை குறைத்து குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து ஓபிஎஸ்-க்கு புரிதல் இல்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தமிழக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்றால் அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலைப்பாடானது தற்போது அவர் முதல்வராக வந்த பிறகு மாறிவிட்டது. அதாவது ஜிஎஸ்டி வரம்பின் கீழ் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வருவதை தமிழக அரசு எதிர்க்கிறது.
இது தேர்தலுக்கு பிந்தைய திமுகவின் நிலைப்பாடு. இதன்மூலம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக இதெல்லாம் திமுகவினர் கூறியுள்ளனர் என்று மக்கள் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே முதல்வர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு பொது மக்களின் சுமையை குறைக்கும் வண்ணம் ஜிஎஸ்டின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பழனிவேல் தியாகராஜனிடம் ஒபிஎஸ் குற்றச்சாட்டு குறித்த பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “இந்த விஷயத்தில் ஓபிஎஸ்க்கு புரிதல் இல்லை. இதற்கு நான் பலமுறை பதலளித்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.