கண்ணிவெடி தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோமாலிய நாட்டில் ஹிரன் பகுதியில் உள்ள புலாபுர்தே என்ற நகரில் விமான நிலையம் ஓன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடந்து கொண்டிருக்கிறது. அப்போது அல்-சபாப் பயங்கரவாதிகள் அங்கு நுழைந்து நில கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் வெடிகள் வெடித்துள்ளன.
இந்த வெடி விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் விமான நிலையத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இச்சம்பவத்திற்கு அல்-சபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என சோமாலியா நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.