தம்பதியை கட்டிப்போட்டு ரூபாய் 31 லட்சம் மதிப்புள்ள பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சங்ககிரி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாவணகெரே மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சிவமூர்த்தியபப்பா மற்றும் சிவம்மா தம்பதியினர். இவர்கள் இருவரும் கிராமத்திலுள்ள தனது தோட்டத்தில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு இருவரும் உறங்கியுள்ளனர். அப்போது அந்த வழியே வந்த எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டு கதவை தட்டியுள்ளனர். கதவை திறந்து பார்த்தபோது மர்ம கும்பல் வீட்டிற்குள் புகுந்து பின்னர் தம்பதியை மிரட்டி கயிற்றால் கட்டி போட்டுள்ளனர். தொடர்ந்து வீட்டிலிருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதற்கிடையே சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது சிவமூர்த்தியாபா மற்றும் அவரது மனைவி கயிற்றால் கட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கயிற்றை அவிழ்த்து தம்பதியினரை காப்பாற்றியுள்ளனர். இதுகுறித்து சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகள் சுமார் 31 லட்சம் வரை இருக்கலாம் என அறியப்படுகிறது.