பெங்களூரில் உள்ள திகழரபாளையா அருகே உள்ள சேத்தன் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்திரிகை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு பாரதி என்ற மனைவியும் சிஞ்சனா, சிந்து ராணி என்ற இரண்டு மகளும் ,மது சாகர் என்ற ஒரு மகனும் உள்ளனர். சிஞ்சனா மற்றும் சிந்து ராணி இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி கணவருடன் சேர்ந்து வாழாமல் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தனர். சிஞ்சனாவுக்கு 3 வயதில் பெண் குழந்தை, சிந்து ராணிக்கு 9 மாத ஆண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி பாரதி, சிந்தனா, சிந்து ராணி மற்றும் மது சாகர் ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து பேடறஹெள்ளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கர் வீட்டில் நேற்று காலை உதவி போலீஸ் கமிஷனர் தலைமையிலான சோதனை நடத்தினார்கள். அப்போது மது சாகர் தற்கொலை செய்த அறையில் அவர் எழுதி வைத்த கடிதமும் சிஞ்சனா மற்றும் சிந்துராணி தற்கொலை செய்த மற்ற இரண்டு அறைகளிலும் அவர்கள் தனித்தனியாக எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியுள்ளது. மது சாகர் கடிதத்தில், தனது தந்தைக்கு கள்ள தொடர்பு இருந்ததாகவும் இது தொடர்பாக தந்தை மற்றும் தாய் பாரதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் அனைத்து பிரச்சனைக்கும் தந்தை சங்கரே காரணம் என்று எழுதி வைத்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மடிக்கணினியில் தந்தை பற்றிய அனைத்து விவரங்களும் இருப்பதாக எழுதி வைத்துள்ளார். அதுபோலவே சஞ்சனா மற்றும் சிந்து ராணி எழுதி வைத்திருந்த கடிதத்தில் எல்லா பிரச்சினைக்கும் தந்தையே காரணம் என்றும் எழுதியுள்ளார். எங்களது கணவர் வீட்டில் கொடுமை படுத்தியதால் தான் பெற்றோர் வீட்டிற்கு வந்தோம் பெற்றோர் வீட்டிலும் பிரச்சினை ஏற்பட்டதால் இந்த முடிவை எடுத்தோம் என்று எழுதி இருந்தார்கள்.
இதையடுத்து சங்கர் வீட்டிலிருந்தும் 3 மடிக்கணினி மற்றும் 4 செல்போன்கள் ஒரு பென்டிரைவ் போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர். அதனைத் தொடர்ந்து மது சாகர் மடிக்கணினியில் சங்கர் பற்றிய விபரங்களை கண்டறிய அதனை ஆய்வு செய்ய போலீசார் அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து சங்கரிடம் பேடரஹேல்லி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.