நடப்பு ஐபிஎல் தொடருக்கு பிறகு விராட் கோலி ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2021 தொடருக்கு பின்பு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முன்னதாக டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகப் போவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது பெங்களூரு அணி கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இருப்பினும் பெங்களூரு அணியில் தொடர்ந்து பேட்ஸ்மேனாக விளையாடுவேன் என்று கூறியுள்ளார். 33 வயதாகும் விராட்கோலி உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர். மூன்று வடிவிலான போட்டிகளில் கேப்டனாக இருப்பதால் அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இவற்றை குறைக்கும் வகையில் விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.