Categories
மாநில செய்திகள்

கொரோனா 3-வது அலை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்… தமிழக அரசு அதிரடி…..!!!

தமிழகத்தில் 2-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வராது. வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்டத்தில் மத்திய அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 19 ஆக்சிஜன் உற்பத்தி முனையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

எனவே ஆக்சிஜன் பற்றாக்குறை  இல்லாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்ட சதவீத அடிப்படையில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது .

கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் கோவை மாவட்டத்தில் உள்ள 13 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு  கொரோனா நெகட்டிவ் சான்று மற்றும் இரு தவணை தடுப்பூசி செலுத்திய சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஜிகா, நிபா வைரஸ் தொற்றுகள் பரவிய நிலையில் தமிழக-கேரள எல்லையோரத்தில் உள்ள கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |