Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நான் சொல்லியும் கேட்கல” கல்லை போட்டு கொலை…. தொழிலாளியின் பரபரப்பு வாக்குமூலம்….!!

கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொன்னே கவுண்டன்புதூர் பகுதியில் செல்வன் என்பவர் வசித்து வந்தார். இவர் கட்டிட தொழிலாளியாக இருந்தார். இவருக்கு மரகதம் என்ற மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் மரகதம் கருத்து வேறுபாட்டால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து  சென்று விட்டார். இதனையடுத்து செல்வன் தனது மகளை வெங்கநாயக்கன் பாளையம் காலனியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். அதன்பின் செல்வன் மகள் வீட்டில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் செல்வன் பெருமாள் கோவில் அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் செல்வன் தலையில் யாரோ மர்ம நபர்கள் கல்லை போட்டு படுகொலை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் செல்வன் கொலை வழக்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகப்படும் வகையில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் நொச்சிக்குட்டை எம்.ஜி.ஆர். பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பொண்ணுகுட்டி என்பதும், இவர்தான் செல்வனை கொலை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் கூறியபோது “செல்வன் கட்டிட வேலைக்கு செல்லும்போது நொச்சிக்குட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

அந்த பெண்ணிற்கு கட்டிட தொழிலாளி பொண்ணுகுட்டி என்பவருடனும் தகாத உறவு இருந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பெண் செல்வனுடன் தொடர்பு வைத்திருந்ததை பொண்ணுகுட்டி கண்டித்துள்ளார். ஆனால் அதையும் மீறி ஒரு கட்டிடத்தில் செல்வனும், அந்த பெண்ணும் ஒன்றாக இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொண்ணுகுட்டி இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்தப் பெண் அங்கிருந்து சென்றுவிட்டார். அதன்பின் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பொண்ணுகுட்டி ஹாலோ பிளாக் கல்லை எடுத்து செல்வன் தலையில் தாக்கியதில் அவர் உயிரிழந்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது”. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பொண்ணுகுட்டியிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |