Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…. இன்று முதல் இலவசம்…. மகிழ்ச்சி செய்தி…!!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ்பெற்ற ஏழுமலையான் கோயில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வார்கள். இங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு மிகவும் பிரபலமானது. நாடு முழுவதும் கொரோனா அதிகரிக்க தொடங்கியதிலிருந்தே கோவிலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன் பக்தர்களுடைய வருகையும் குறைந்தது.

தற்போது படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் உள்ளூர் பக்தகர்களை தவிர மற்ற மாநில பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் அனைத்து மாநில பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இரவு 11.30 மணி வரை இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது என்றும் தேவஸ்தானம் மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |