Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில்… இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்..!!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சேலம்,  திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இன்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரியலூர், மதுரை, பெரம்பலூர், ராமநாதபுரம், நெல்லை,  புதுக்கோட்டை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை 8 மாவட்டங்களில் கனமழையும், தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக வாணியம்பாடி கலசப்பக்கத்தில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஆம்பூர் – 7 பரமக்குடி- 6 பொன்னேரி- 5 வாலாஜா மற்றும் செங்கம் தலா 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது..

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |