சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் பல அரசு துறைகள் இயங்கி வருகின்றன. தமிழக அரசின் இணையதள பக்கத்தில் ஒவ்வொரு துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அறிவிப்புகள், அரசாணைகள் மற்றும் உத்தரவுகள் ஆகியவை அந்தந்த துறையின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் பொதுத்துறை பிரிவில் பிரமுகர்களின் வருகை விவரங்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பற்றி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அந்த விவரங்களை கம்ப்யூட்டரில் இருந்து ஹேக்கர்கள் திருடியதாக தகவல் வெளியாகியது .அதுமட்டுமில்லாமல் இந்த தகவல்களை தர வேண்டுமென்றால் ரூ.1,45,000 தர வேண்டும் என்று மிரட்டுல் விடுத்துள்ளன .ஆனால் இத்தகவல் உண்மையென அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை . இதுபற்றி போலீஸ் அதிகாரியிடம் கேட்ட போது, சம்மந்தப்பட்ட துறையிடமிருந்து எந்த ஒரு புகாரும் வரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.