‘பிகில்’ படத்தின் ‘மாதரே’ பாடலின் வரிகள் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி கலக்கி வருகிறது.
நடிகர் விஜய் – இயக்குநர் அட்லி மூன்றவாது முறையாக இணைந்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு என பலரும் நடித்துள்ளனர். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் பிகில் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது முதல் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரிசையாக வெளிவரத் தொடங்கின. அதன்படி தணிக்கைக்குழு பிகில் படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கியது என்றும், படத்தின் நீளம் 2 மணி நேரம் 59 நிமிடங்கள் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அதைத் தொடர்ந்து, படம் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அதாவது, அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இணையத்தில் வெறித்தனமாக வைரலாகிவரும் நிலையில், தற்போது சின்மயி குரலில் மாதரே…மாதரே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளிாகியுள்ளது. பாடல் வெளியான சிலமணி நேரத்திலேயே சமூக வலைதளத்தில் #Mathare ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. ரசிகர்கள் இப்போது இருந்தே பிகில் தீபாவளியை உற்சாகமாக கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.
Here it is #Mathare ❤️ #Bigil https://t.co/w1lqleOGxi
— Archana Kalpathi (@archanakalpathi) October 20, 2019