Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் வரும் 20-ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள்.. வெளியான தகவல்..!!

சுவிட்சர்லாந்தில் வரும் திங்கட்கிழமையிலிருந்து, புதிய கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சுவிட்சர்லாந்தில், திங்கட்கிழமையிலிருந்து தடுப்பூசி செலுத்தாத மற்றும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, குணமடையாத மக்கள், கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் கோடை விடுமுறைக்கு பின்பு, கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மருத்துவமனைகளில், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் பல நோயாளிகள், பிற நாடுகளின் சுற்றுலாத்தளங்களுக்கு சென்று வந்த மக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் மாதத்தில் பள்ளிகளுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை வரவுள்ளது. எனவே அதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் Alain Berset கூறியுள்ளார்.

மேலும், தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் செலுத்தாதவர்கள் என்று அனைத்து மக்களும், சுவிட்சர்லாந்திற்குள் வந்தால், ஒரு ஆவணத்தை நிரப்பவேண்டும்.இது மட்டுமல்லாமல், தங்களுக்கு தொற்று இல்லை என்று நிரூபிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள், நாட்டிற்கு வந்த 4 முதல் 7 தினங்களுக்குள், இரண்டாவது தடவையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வாரத்திலிருந்து, சுவிட்சர்லாந்தில் உணவகம் மற்றும் மதுபான விடுதி போன்ற  இடங்களுக்கு கொரோனா சான்றிதழ் இல்லாமல் செல்ல முடியாது என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |