தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் ஒலிபரப்பு துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால் வளத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கிடையில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த மத்திய அமைச்சர்கள் அனைவரும் ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் எல்.முருகன் பாஜக வேட்பாளராக மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து குறிப்பிட்டுள்ள எல்.முருகன், மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பை வழங்கிய பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி. அதுமட்டுமின்றி பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகான், மத்தியபிரதேச பாஜக தலைவர் அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.