பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் பிரபல இயக்குனர் செல்வராகவனும் இப்படத்தில் நடிப்பதால் பீஸ்ட் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. வெளிநாடு செல்வதற்கு முன் டெல்லியில் 4 நாட்கள் தங்கி சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டும் என்று படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல்படி பீஸ்ட் படத்தின் 65 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.