Categories
தேசிய செய்திகள்

மோடியின் பிறந்தநாளை… இப்படி கூட கொண்டாடலாம்…. சுப்ரியா ஸ்ரீநாத் விமர்சனம்….!!!!

பிரதமர் மோடியின் பிறந்த நாள் தினம் பல்வேறு தினமாகவும், அவரது தோல்விகளுக்கு நாடு விலை கொடுத்து கொண்டிருக்கிறது. என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

மோடியின் பிறந்தநாளையொட்டி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “ஹப்பி பர்த்டே” மோடிஜி என்று ஒரே வரியில் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். இதனையெடுத்து  காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். பிரதமருக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவர் நலமாக இருக்க வேண்டுகிறேன். முன்னாள் பிரதமர்களின் பிறந்த நாள் ஏதேனும் ஒரு தினமாக கொண்டாடப்படுகிறது.

அதேபோல் பிரதமர் மோடியின், பிறந்த நாள்  வேலையில்லா திண்டாட்டம் தினமாகவும், விவசாய எதிர்ப்பு தினமாகும், விலைவாசி உயர்வு தினமாகவும், நெருக்கமான முதலாளித்துவ நண்பர்கள் தினமாகவும்,  சிபிஐ சோதனை தினமாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக நீங்கள் பல்வேறு துறைகளிலும் தோல்வி அடைந்திருக்கிறார்கள். உங்கள் தோல்விகளுக்கு  நாடு விலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியின் நம்பிக்கையான உறுதிமொழிகளான, ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு என்ன ஆனது? அதேசமயம் 60 லட்சம் அரசு வேலைகள் ஏன் காலியாக உள்ளன? என கேள்வி எழுப்பினார்.

கடந்த 9 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் தீர்வுக்கான  அறிகுறியே இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் ,பருப்பு, சமையல் எண்ணெய் விலை உயர்வால் மக்களின் நிலை அன்றாடம் திண்டாட்டமாக உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவை முடக்கி விட்டன. சிறு நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. இருப்பினும் உங்கள் நண்பர்களுக்காக இந்தியாவை விற்பனைக்கு  வைத்திருக்கிறீர்கள்.கொரானா தீவிரமாக இருந்தபோது, மோடியின் தீவிரம் பிரச்சாரத்தில் இருந்தது. மேலும் சிபிஐ அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் மோடியை சுட்டிக்காட்டியுள்ளார்.

Categories

Tech |