Categories
மாநில செய்திகள்

“நீங்க டாக்டருக்கு தான் படிக்கணும்”…. அழுத்தம் கொடுக்கும் பெற்றோருக்கு அமைச்சர் வேண்டுகோள்….!!!!

சென்னையில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகம் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. இதனை தரம் உயர்த்தி மனநல ஆராய்ச்சி மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தை பொருத்தவரை ஓர் ஆண்டுக்கு 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரை தற்கொலைகள் நடக்கின்றன.இந்த தற்கொலைகளை தடுக்கும் வகையில் சாணி பவுடர் நிறுவனங்களுக்கு தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது . அதனை போலவே பால்டாயில், எலி மருந்து ஆகியவற்றை இரண்டு நபர்களுக்கு மேல் சேர்ந்து வந்து கேட்டால் மட்டுமே வணிகர்கள் விற்பனை செய்ய வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து நீட் தேர்வு எழுதியவர்களுக்கான மனநல ஆலோசனை மையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு பேசிய அவர் , தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1000 க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகளுக்கு தொலைபேசி மூலமாக ஆலோசனை வழங்கி வருகிறது. அதில் ஒரு சில மாணவர்கள், தங்களுடைய பெற்றோர்களுக்காக தான் நாங்கள் டாக்டராக வேண்டும் என்று படிக்கிறோம் அவர்களை நினைத்து தான் நாங்கள் வருத்தப்படுகிறோம் என்று கூறியள்ளனர்.

பெற்றோர்களிடம் மனநல ஆலோசகர்கள் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை கொடுக்காமல், அவர்களுக்கு மன தைரியத்தை மட்டும் ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தபடுகிறது. மேலும் சிலர் மனநல ஆலோசனை ஆலோசகர்களுடன் பேசியவர்கள் முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இன்னும் 15 நாட்களுக்குள் இந்த மன நல ஆலோசனை முடியும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |