தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால் பள்ளிகள் திறந்து 15 நாட்களில் 84 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதால் அவற்றை மூட அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அரசு, மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் கொரோனாவும் மையங்களாக மாறவில்லை. தேவைப்பட்டால் ஓரிரு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளை முழுவதுமாக மூட வாய்ப்பில்லை என கூறியுள்ளது.