கனடாவில் வசிக்கும் பொறியாளர் ஒருவர், ஆங்கில கால்வாய்க்குள் நுழைந்த படகில், போதைப்பொருள் இருப்பதாக, வெளியான செய்தியைக் கண்டு பெரும் சோகமடைந்துள்ளார்.
ஆஸ்திரேலிய நாட்டின் அதிகாரிகள், பிரிட்டன் எல்லை படைக்கு கொடுத்த ரகசிய தகவலின் படி, கரீபியன் கடல் பகுதியிலிருந்து, ஆங்கில கால்வாய்க்குள் நுழைந்த படகை, பிரிட்டன் காவல்துறையினர், நேற்று சோதனை செய்துள்ளனர். அதில் 250 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய 2000 கிலோ கொக்கைன் இருந்துள்ளது.
இது தொடர்பில் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நபர் உட்பட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது பற்றி தொலைக்காட்சியில் வெளியான செய்தியை, வான்கூவரில், தன் குடியிருப்பிலிருந்து வருத்தத்துடன் Peter என்பவர் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
அதாவது Peter வெற்றிகரமான தொழிலதிபர் மற்றும் பொறியாளராக இருந்திருக்கிறார். அப்போது, இவர் அந்த படகை நியூசிலாந்து கடற்படையிடம் இருந்து வாங்கி, தன் மனைவியுடன் சேர்ந்து, தங்கள் குழந்தைகளுடன் உணவு உண்பதற்கும், தூங்குவதற்கும், படிப்பதற்கும் ஏற்றவகையில் வீடு போன்று வடிவமைத்திருக்கிறார்.
அதன்பின்பு, அதில் உலகத்தை சுற்றி வந்திருக்கிறார்கள், பீட்டர் மற்றும் அவரின் மனைவி இருவரும். அந்த சமயத்தில், அவர்கள் கனடா நாட்டின் வான்கூவர் நகருக்கு சென்றடைந்தபோது, அவரின் படகு கட்டும் நிறுவனத்திற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனால், படகு அவரிடமிருந்து பறிபோனது. அதன்பின்பு, Peter ஒரு நிறுவனத்தில் பொறியாளராக பணி தேடிக்கொண்டார்.
அவரின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால், Peter தன் குழந்தைகளுடன் கனடாவிலேயே தங்கிவிட்டார். இப்படிப்பட்ட சூழலில் தான், ஒரு காலத்தில் தன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வலம் வந்த படகு, தற்போது போதை பொருள் கடத்தலில் மாட்டியதாக வெளியான செய்தியைக்கண்டு வருத்தத்துடன் இருக்கிறார் Peter. மேலும், தன் படகை மீண்டும் வாங்கிவிட வேண்டும் என்ற விருப்பம் உள்ளதாகவும், ஆனால் தற்போது அதனை வாங்கக்கூடிய நிலையில் நான் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.