Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் திடீர் என தோன்றி குத்தாட்டம் போட்ட இளம் பெண்… சரசரவென பாய்ந்த வழக்கு… வைரலாகும் வீடியோ…!!!

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஸ்ரேயா என்பவர் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அப்பெண் மீது காவல்துறையினர் பல வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள முக்கிய சாலைகளில் சந்திப்பு பகுதி ஒன்றில் சிக்னலின் போது இளம்பெண் ஒருவர் நடனமாடும் வீடியோவானது வைரலாக பரவி வருகிறது. போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் பொழுது இளம்பெண் நடு ரோட்டில் வந்து நடனமாடுகிறார். இதனை வாகன ஓட்டுனர்கள் அனைவரும் வியப்புடன் பார்த்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வீடியோ பதிவு ஒன்றிற்காக இந்த நடனம் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இதை அறிந்த மத்திய பிரதேச அமைச்சர் அப்பெண்ணின் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது அந்த பெண் இந்தூரை சேர்ந்த ஸ்ரேயா கல்ரா என்பதும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதற்காக இதுபோன்று நடனமாடியது தெரியவந்துள்ளது.

இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து அந்த பெண் மீது போக்குவரத்து விதி மீறலுக்கான நோட்டீசை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர் மேலும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நிகழ்ச்சிகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டிருந்தனர். இது தொடர்பான விசாரணையில் அந்த பெண் தெரிவித்துள்ளதாவது: போக்குவரத்து விதிகளை மீறி தான் எந்த குற்றமும் இழைக்கவில்லை என்று கூறியதோடு, முககவசம் அணிவது, மற்றும் சிவப்பு விளக்கு எரிந்தால் வாகனத்தை நிறுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தான் இதை செய்ததாக விளக்கமளித்துள்ளார்.

Categories

Tech |