பவானி அருகில் உள்ள ஜம்பை துருவம் பாளையத்தை சேர்ந்த சக்திவேல்( 40) என்பவர் எலக்ட்ரிஷனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதனையடுத்தது சக்திவேல் தனது இரண்டு மகன்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்கு பவானியை அடுத்த தளவாய் பேட்டை வைரமங்கலம், பவானி ஆற்றுக்கு கூட்டிச் சென்றார். அப்போது பவானிசாகர் அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சக்திவேல் தனது மகன்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துவிட்டு தானும் குளித்துக் கொண்டிருக்கும் போது, தண்ணீரில் அடித்து சென்றுக்கொண்டிருந்த வாழை மரத்தை அவர் பிடிக்க முயன்றார். ஆனால் எதிர்பார விதமாக சக்திவேல் தண்ணீரின் வேகத்தால் அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்த அவரது மகன்கள் சத்தம் போட்டு கதறி அழுதனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள், தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சக்திவேலை கரையோரப் பகுதி முழுவதும் தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பின்னர் நீரேற்று நிலையம் பகுதியில் அவரது உடல் கண்டறியப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.