மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கீழ் ஆசியரை கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவடத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கும்பகோணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் தான் பணிபுரியும் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவிகள் அப்பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரை ஏற்ற தலைமை ஆசிரியர் பள்ளியின் சார்பாக சேகரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தஞ்சை மாவட்டத்திலுள்ள போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்துள்ளார். இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவின் படி காவல்துறையினர் சேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இவர் ஏற்கனவே 2014-ஆம் ஆண்டில் இதே தவறுக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.