1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பஞ்சாப் வீராங்கனை ஹர்மிலன் கவுர் பெய்ன்ஸ் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் .
60-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது தெலுங்கானா மாநிலத்தில் வாரங்கலில் நடைபெற்று வருகிறது . இதில் இரண்டாவது நாளான நேற்று நடைபெற்ற மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பஞ்சாப் வீராங்கனை ஹர்மிலன் கவுர் பெய்ன்ஸ் 4 நிமிடம் 05.39 வினாடிகளில் நிர்ணயித்த இலக்கை கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இதன்மூலம் கடந்த 19 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்தார் .
இதற்கு முன்னதாக கடந்த 2002 ஆசிய போட்டியில் இந்தியாவின் சுனிதா ராணி 4 நிமிடம் 06.03 வினாடியில் இலக்கை எட்டியது தேசிய சாதனையாக இருந்தது. இதையடுத்து 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தரன்ஜீத் கவுர் 11.50 வினாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார். இதையடுத்து மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் 53.79 வினாடிகளில் இலக்கை எட்டி முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்