சென்னையில் 144 தடையை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தனிமைப் படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை ஏற்படுத்தி தலை வலி யுறுத்தி 144 குற்றவியல் சட்டம் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி கடந்த ஆண்டு மார்ச் 24ஆம் தேதி முதல் 144 தடை முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் 15 நாட்களுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இந்த தடை உத்தரவு செப்டம்பர் 15-ஆம் தேதி வரை அமலில் இருந்தது. தற்போது குரோனா பரவல் நாளுக்கு நாள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை பொது முடக்கம் நீக்கப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அனைத்தும் அமல்படுத்தப்படும். இதனை மீறுவோர் மீது 144 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.